உத்தரபிரதேச மாநில தேர்தலில் துப்புரவு பணியாளர் கணேஷ் சந்திரா என்பவர் தங்கடா (Dhanghata) தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
35 வயதான கணேஷ் சந்திரா, சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள மூடதிஹா கிராமத்தில் பிறந்தார். கணேஷ் சந்திராவின் தந்தை ஒரு கொத்தனார்.
கணேஷ் சந்திரா முதலில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, பிறகு அரசு துப்புரவு தொழிலாளியாகி, தற்போது சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற பந்தா இல்லாமல், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்போதும் அவர் தூய்மை பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், தங்கடா (Dhanghata) சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் சந்திராவை நாம் தொடர்பு கொண்டோம்:
தூய்மை பணியாளர்களுக்கு மதிப்பளித்து , பாஜக சீட் வழங்கியதின் மூலம் ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் அங்கீகாரம் வழங்கபடுகிறது என்றும், தூய்மை பணியாளர்கள் குறைந்தவர்கள் இல்லை என்றும், அவர்கள் சமூகத்தின் குப்பைகளை சுத்தம் செய்கின்றவர்கள் என்றும், சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் சந்திரா நம்மிடம் தெரிவித்தார்.
Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com