தூக்கில் தொங்கிய நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி!-உறவினர்கள் சாலை மறியல்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி காவல் உட்கோட்டம், ஆண்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாவுன்ராஜ் – ஈஸ்வரி தம்பதியின் மகளான அனுராத்திகா; இவர் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆணடு படித்து வருகிறார்.

நேற்று (19/03/2022) மாலை வெகு நேரமாகியும் அனுராத்திகாவை காணவில்லை என்பதால், அனுராத்திகாவின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அவரை தேடி பார்த்தனர். இந்நிலையில், தோட்டத்து வீட்டில் பார்த்த போது அவரது உடல் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளது.

உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி காவல் நிலைய போலிசார், அனுராத்திகாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது அனுராத்திகாவின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர்; இது கொலையா? தற்கொலையா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுசம்மந்தமாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு (Crime No: 99/2022) செய்யப்பட்டுள்ளது..

இந்நிலையில், அனுராத்திகாவை அடித்துக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி, சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மதுரை – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் இன்று (20/03/2022) ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் விரிவானத் தகவலை அறிவதற்காக, ஆண்டிப்பட்டி காவல் நிலைய காவல்துறையினரை இன்று (20/03/2022) மாலை 4 மணிக்கு நாம் தொடர்புக் கொண்டோம்.

இவ்வழக்கில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. பெண்ணின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக போராட்டத்தை கை விடும்படி சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply