தார் கலவை ஆலையை மூட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் மாசுக்களால் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மூட வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வுக்குப் பின் சீல் வைத்து மூடப்பட்ட இந்த ஆலை கடந்த மூன்று நாட்களுக்கு முன் போலீசார் பாதுகாப்புடன் திறந்து செயல்படத் துவங்கியது.

இது குறித்து இன்று (20.03.2022) மதியம் 2:13 மணியளவில் நாம் விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த தார் கலவை ஆலையை மூட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவாலாவில் இன்று (20.03.2022) மாலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

-செந்தில் குமார்.

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு, கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/03/20/70025/

Leave a Reply