இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாடு!

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த எஃகு அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.

கார்பன் மற்றும் ஹைட்ரஜன் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். தற்போது, எஃகு நிறுவனங்களின் வளாகத்தில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகள் மிகக் குறைந்த அளவில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

எஃகுத் தொழில் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத தொழில் என்பதால் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக/ஆக்சிஜன் குறைப்பாகப் பயன்படுத்துவது தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறுகளில் தொடர்ந்து இருக்கும்.

திவாஹர்

Leave a Reply