ஆயுஷ் பொருட்கள் தொடர்பான தவறான போலியான விளம்பரங்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளுக்கான மருந்தகக் கண்காணிப்பு மையத்திற்கு நாடு முழுவதும் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தவறான விளம்பரங்கள் தொடர்பாக 18,812 புகார்கள் வந்துள்ளன. நுகர்வோர் விவகாரத்துறையின் இணையதளத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஆயுஷ் தொடர்பான 1,416 தவறான விளம்பரங்கள் குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டது.
மேலும், ஆயுஷ் அமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விளம்பர தர நிர்ணயக் குழு ஆயுஷ் பொருட்கள் தொடர்பான 1,229 தவறான விளம்பரங்கள் குறித்து புகார் பதிவு செய்தது. ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஹோமியோபதி மருந்துகளுக்கான மருந்தகக் கண்காணிப்பு மையம் தவறான விளம்பரங்கள் குறித்து கண்காணித்து சம்பந்தப்பட்ட மருந்து உரிமம் ஆணையத்திற்கு புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறது.
மேலும், பொது நலன் கருதி ஊடகங்களும், ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்வதற்கான தவறான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
–எம்.பிரபாகரன்