விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹரிஹரன் என்பவர், ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 22 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக நாடகமாடி நம்ப வைத்து அப்பெண்ணை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, அப்பெண்ணுக்கு தெரியாமல் அதை தன் செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதை தன் நண்பர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்ததின் விளைவாக, அந்த வீடியோ பதிவை பார்த்த 7 நபர்கள் தொடர்ச்சியாக அப்பெண்ணை மிரட்டி தொடர்ந்து பலமுறை வன்புணர்ச்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த எழுத்துப் பூர்வமான புகாரின் அடிப்படையில், விருதுநகர் ஊரக காவல் நிலைய போலிசார் வழக்கு (Crime No: 42/2022) பதிவு செய்து திமுக நிர்வாகி ஜீனைத் அகமது உள்பட ஹரிஹரன், பிரவீன் மாடசாமி ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், இதே குற்றத்தில் ஈடுப்பட்ட 4 சிறுவர்களை காவல்துறையினர் கையகப்படுத்தி, அவர்களை சிறார் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜுனைத் அகமது திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காம வெறிப்பிடித்த கயவர்களை எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இவர்கள் ஜாமீனில் வெளிவருவதற்கு முன்பாகவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, சட்டப்படி கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு முழு மூச்சுடன் முனைப்பு காட்ட வேண்டும். இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு; வருங்கால தலைமுறையினருக்கு இது தக்க பாடமாக அமைய வேண்டும்.
அப்போதுதான் காவல்துறை மீதும், நீதித்துறை மீதும் மற்றும் அரசு மீதும் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com