வருங்கால போட்டிகளுக்காக இந்திய நீச்சல் வீரர்கள் 4 பேருக்கு விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி!

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்கமேடை இலக்குத் திட்டம் (TOPS) மற்றும் வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, இந்திய நீச்சல் வீரர்களுக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் இயக்கப் பிரிவின் ஒப்புதலுக்குப் பிறகு, சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தா ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சஜனுக்கு, ரூ.15.1 லட்சம் (நீச்சல் குள கட்டணம் மற்றும் விமான கட்டணம் நீங்கலாக), பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சி மற்றும் பயிற்சி முகாம்களுக்கான செலவுக்காக வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று ஸ்ரீஹரி நடராஜ்-க்கு 22.02 லட்சமும், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தாவிற்கு தலா ரூ.3.89 லட்சமும் வழங்கப்படுகிறது.

திவாஹர்

Leave a Reply