மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்காக திட்ட வாரியாக நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில வாரியாக ஒதுக்கப்படவில்லை. இந்த அமைச்சகத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பல்வேறு திட்டத்தின்கீழ் கடந்த ஐந்தாண்டுகளிலும், நடப்பாண்டிலும், 12,788.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 11,482.77 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து அவ்வப்போது இளைஞர் மற்றும் விளையாட்டு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசு பெற்று வருகிறது. பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் விளையாட்டு கட்டமைப்பு உருவாக்குதல் திட்டத்தின்கீழ் 289 விளையாட்டு கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இந்த அனைத்து திட்டங்களும் பாலின பாகுபாடு இன்றி நிறைவேற்றப்படுவதாகவும், மகளிருக்கான விளையாட்டு மேம்பாட்டுக்கு அக்கறை செலுத்தப்படுகிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்