மகாராஷ்டிராவில் வருமான வரித் துறை சோதனை!

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை கல்வி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இச்சோதனையின் போது, தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிராவில் அவர்களுக்கு சொந்தமான சுமார் 24 அசையா சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத 27 லட்சம் ரூபாயும், 3.90 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த விசாரணை மேலும் நடைபெற்று வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply