தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியான மேலூர் இரயில் நிலையம் மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதவிநாயகர் திருக்கோவில் அமைந்துள்ள 2-ம் கேட் பகுதியில் திருக்கோவிலின் பின்புறம் சாக்கடை நீர் நீண்ட நாட்களாக தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலம் விரைவில் துவங்க இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து முறையான வடிகால் அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-பொ.கணேசன் @ இசக்கி.