உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் ஜூலை 26-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 5-ம் தேதி அன்னையின் பெருவிழா நடைபெறுகிறது.
அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும் 5.12 மணிக்கு 2-ஆம் திருப்பலியும் 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் பீட்டர் பர்னாந்து தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு செல்வராஜ் அடிகளார் தலைமையில் ஆடம்பரத் திருப்பலி நடைபெறுகிறது.
இதையடுத்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். பேராலயத் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை லெரின் டிரோஸ் தெரிவித்தார்.
-பொ.கணேசன் @ இசக்கி.