மகாராஷ்டிராவின் சங்லியில் ரூ.2,334 கோடி மதிப்பிலான இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மகாராஷ்டிராவின் சங்லியில் ரூ.2,334 கோடி மதிப்பிலான இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றின் நீளம் 96.78 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, கடந்த ஏழு ஆண்டுகளில், மகாராஷ்டிராவில் ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் சாலைகள், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிறுதொழில்கள், பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாட்டிலேயே மகாராஷ்டிராவை முதல் மாநிலமாக்க தாம் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

புனேவுக்கும் பெங்களூருவுக்கும் இடையே புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதாக திரு கட்கரி கூறினார். சங்லி, சதாரா, கோல்காப்பூர் மாவட்டங்களின் பிற்பட்ட பகுதிகள் வழியாக இந்தச் சாலை செல்வதாகக் கூறிய அவர், இந்தப்பகுதி இதனால் பெருமளவுக்கு பயனடையும் என்றார்.

இந்தத் திட்டங்களால், எரிபொருள் செலவும், பயண நேரமும் மிச்சமாகும். அகலமான சாலைகளால் விபத்துக்கள் குறையும். பயணம் செய்வது எளிதாகும். வேளாண் உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதும் எளிதாகும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply