குஜராத்தின் கெவாடியா ஒற்றுமை சிலை வளாகத்தில் பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் உணவு கொண்டாட்டமான ஆடி பஜார் தொடங்கப்பட்டது.

பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் உணவுகளின் கொண்டாட்டமான ஆடி பஜார், குஜராத்தின் நர்மதா மாவட்டம் கெவாடியாவில் ஒற்றுமை சிலை அமைந்துள்ள ஏக்தா நகரில் மார்ச் 26-ந்தேதி தொடங்கிவைக்கப்பட்டது. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு ( டிரைபெட்), மார்ச் 26 முதல் ஏப்ரல் 5 வரையிலான 11 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சியை குஜராத் மாநில பழங்குடியினர் மேம்பாட்டு துறை இணையமைச்சர் திருமதி நிமிஷாபென் சுதர் தொடங்கிவைத்தார். மாநில உயர்கல்வி துறை இணையமைச்சர் டாக்டர் குபேர்பாய் மன்சுக்பாய் தின்டர், டிரைபெட் தலைவர் திரு ராம்சிங் ரத்வா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த 11 நாள் கண்காட்சியில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 100 அரங்குகளுக்கும் அதிகமாக இடம்பெறும். இதில் பழங்குடியினரின் பல்வேறு உற்பத்தி பொருட்கள் இடம்பெறும். ந்த மாநிலங்களின் பழங்குடியினர் கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், ஓவியங்கள், ஜவுளி, ஆபரணங்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்படும். 

மற்றொரு ஆடி பஜார் கண்காட்சி ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவில் இம்மாதம் 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெறும். பழங்குடியினரின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

திவாஹர்

Leave a Reply