தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.15.5 லட்சம் செலவில் 3-வது மைல், சிதம்பரநகர் மற்றும் சத்திரம் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
நிழற்குடைகளை மாநகராட்சி மேயர் பீ.சேவியர் 23.07.2014 புதன்கிழமை திறந்து வைத்தார். ஸ்டெர்லைட் நிறுவன வணிகப்பிரிவு இணை துணைத்தலைவர் தனவேல் முன்னிலை வகித்தார். நிறுவன பொது மேலாளர்கள் குமாரவேந்தன், சுமதி, சமூக தொடர்புத்தலைவர் இரமேஷ், மாநகராட்சி பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-பொ.கணேசன் @ இசக்கி.