ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாகங்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் மத்திய அரசால் 30 செப்டம்பர் 2021 அன்று அறிவிக்கப்பட்டு, இத்திட்டத்தின்கீழ், ஊக்கத் தொகை பெற ட்ரோன் உற்பத்தியாளர்களிடம் இருந்து 10 மார்ச் 2022 அன்று விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன்படி, ட்ரோன் உற்பத்தியாளர்கள் / தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு மூன்றாண்டுகளுக்கு மொத்தம் ரூ. 120 கோடி உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக வழங்கவுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வருடாந்திர மொத்த ஒதுக்கீட்டில் 25%-க்கு மிகாமல் வழங்கப்படும். ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாக வருடாந்திர விற்பனை வருவாய் மதிப்பிலிருந்து கொள்முதல் செலவை கழித்தது போக எஞ்சியத் தொகை மதிப்பு கூடுதலாக கணக்கிடப்படும் என சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்