தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 432-ஆவது ஆண்டு திருவிழா 26.07.2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்தின் போது உலக அமைதியை வலியுறுத்தி சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பழைய துறைமுகத்தில் இழுவைக் கப்பலில் இருந்து சங்கொலி எழுப்பப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக தாங்கள் கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தனர்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், சட்டப்பேரவை உறுப்பினர் தி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி மேயர் பொறுப்பு பீ.சேவியர், ஆலயப் பங்குத் தந்தை லெரின் டிரோஸ் உள்பட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
-பொ.கணேசன் @ இசக்கி.