தூத்துக்குடி பிரையண்ட் நகர் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க வெள்ளி விழா மற்றும் அலுவலக கட்டடிடம் திறப்பு விழா பிரையண்ட் நகர் 7-ம் தெரு கீழ்பகுதியில் நடைபெற்றது.
சங்க அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் திறந்து வைத்தார். வெள்ளி விழா நிகழ்ச்சி பிரையண்ட் நகர் 5-வது தெரு காமராஜர் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் வியாபாரிகள், ஹோட்டல் அதிபர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-பொ.கணேசன் @ இசக்கி.