சர்வதேச யோகா தினம், 2022க்கு கவுன்ட் டௌன் நிகழ்ச்சியாக யோகோத்சவை நிலக்கரி அமைச்சகம் ஏப்ரல் 15 அன்று கொண்டாடவிருக்கிறது

பிரதமர் நரேந்திர மோதியின் முன்முயற்சியால் 2014ல் ஐநா பொதுச்சபை ஜூன் 21 சர்வதேச யோகா தினம் என அறிவித்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்தது. நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தில் யோகா ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் நிலையில் யோகாவிற்கு உலகளாவிய இந்த ஏற்பு நமது நாட்டிற்குப் பெருமையான விஷயமாகும். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம், காலையில் பிரதமரே தலைமைதாங்கும் பெருந்திரள் மக்களின் யோகா பயிற்சியுடன் தொடங்கும். இதைத் தொடர்ந்து யோகா தொடர்பான இதர செயல்பாடுகள் இடம்பெறும்.

சர்வதேச யோகா தினம் 2022க்கு # 67 நாட்களே இருக்கும் நிலையில் நிலக்கரி அமைச்சகம் 2022 ஏப்ரல் 15 அன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளை நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ராவ்சாஹேப் பாட்டில் தன்வே தொடங்கி வைப்பார். நிலக்கரி அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளும் இதில் பங்கேற்பார்கள். மேலும் இந்த அமைச்சகத்தின் அலுவலகங்களைச் சேர்ந்த இளநிலை அலுவலர்களும் இந்த அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலர்களும் கலந்து கொள்வார்களள். பொதுவான யோகா நடைமுறைகள், இடை ஓய்வு பெறும் யோகா நடைமுறை, நிபுணர்களால் யோகா குறித்த விரிவுரை, யோகா செயல்பாடு ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இருக்கும்.

திவாஹர்

Leave a Reply