இந்தியா – பிரான்ஸ் ராணுவ அதிகாரிகள் அளவிலான 20-வது கூட்டுப் பேச்சுவார்த்தை, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஏப்ரல் 12-13, 2022 நடைபெற்றது. இந்தப் பேச்சுவதார்த்தைக்கு, ஒருங்கிணைந்த படைப் பிரிவுகளின் உதவித் தலைவர், இன்ட்-சி(ராணுவ நடவடிக்கைகள்), தலைமையிட, ஒருங்கிணைந்த ராணுவ அதிகாரிகள் (ஹெச்.க்யூ-ஐடிஎஸ்) ஏர் வைஸ் மார்ஷல் பி.மணிகண்டன் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தெற்குப் பிரிவு தலைவர்/பணியாளர் தலைமையிட பிரிகேடியர் ஜெனர் எரிக் பெல்டியர் ஆகியோர் கூட்டாகத் தலைமைவகித்தனர்.
இந்த சந்திப்பு, நட்புறவுடனும், இதமான மற்றும் உள்ளன்பான சூழலிலும் நடைபெற்றது. தற்போதைய இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு நடைமுறை வரம்பின்கீழ் புதிய முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போதைய ராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
திட்டமிடல் மற்றும் செயல்பாடு ரீதியாக, இருநாடுகளுக்குமிடையிலான ராணுவ ஒத்துழைப்புகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், இந்தியா – பிரான்ஸ் கூட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது.
–எம்.பிரபாகரன்