அடிப்படைக் கட்டமைப்புக்கு முழுமையான ஒருங்கிணைந்த திட்டமிடலுக்கான பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பிரதமரின் விரைவு சக்தி குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ரயில்வே வாரியத் தலைவர் வி கே திரிபாதி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சக செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜீவ் பன்சால், தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் அனுராக் ஜெயின், இதர அடிப்படைக் கட்டமைப்புக்கான அனைத்து அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

டிபிஐஐடி, பொருள் போக்குவரத்துப் பிரிவின் சிறப்பு செயலாளரால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சகம் வாரியான இலக்குகளின் முன்னேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் 2024 25க்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிர்ணயித்த 2,00,000 கிலோமீட்டர் இலக்கில் 2022 மார்ச் 31 நிலவரப்படி 1,41,190 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளைப் பூர்த்தி செய்துள்ளது.

இதேபோல் இதே காலத்திற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நிர்ணயித்த 34, 500 கிலோமீட்டர் இலக்கில் 20,000 கிலோமீட்டர் எரிவாயு குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மின்சாரம் கொண்டு செல்லும் வலைப்பின்னலை 2022 மார்ச் இறுதிவரை 4, 54, 200 கிலோ மீட்டர் அமைத்து மின்சார அமைச்சகம் ஏற்கனவே இலக்கை விஞ்சியுள்ளது.

2024 – 25க்கு நிர்ணயிக்கப்பட்ட 50,00,000 கிலோமீட்டர் இலக்கில் 2022 மார்ச் 31 நிலவரப்படி தொலைத்தகவல் தொடர்புத் துறை 33,00, 997 கிலோமீட்டர் கண்ணாடி இழை வடத்தை உருவாக்கியுள்ளது.

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட இணையப்பக்கத்தின் பயன்கள் மற்றும் களத்தில் அதன் தாக்கம் பற்றிய விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களில் திட்டமிடல் நிலைமை, செலவு விவரம், அமலாக்க முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும் ஒத்துப்பார்க்கவும் பல்வேறு அமைச்சகங்கள் துறைகள் மற்றும் மாநில அரசுகள் இந்த இணையப்பக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந் திட்டத்தின் திறன் குறித்து எடுத்துரைத்த அமைச்சர் திரு பியூஷ் கோயல் பல்வேறு பொருளாதார மண்டலங்களுடன் பலவகையான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்துவது பொருட்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் என்றார். இந்த தேசியப் பெருந்திட்டம் மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநிலங்களால் விரிவாக ஏற்றுக் கொண்டிருப்பது குறித்து அமைச்சரின் நிறைவுரையில் திருப்தி தெரிவித்தார். பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் தாக்கம் களத்தில் ஆக்கப்பூர்வமாக இருப்பதை அவர் பாராட்டினார். அனைத்து அடிப்படைக் கட்டமைப்பில் அமைச்சகங்களால் செய்யப்பட்டுள்ள சிறந்த பணியை அவர் பாராட்டினார். திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்கான சிறந்த நடைமுறையை உருவாக்குவது குறித்தும் அவர் வழிகாட்டுதல் தந்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply