நிலக்கரி அமைச்சகத்தின் யோகா திருவிழா கவுண்ட்டவுன் நிகழ்ச்சியைத் நிலக்கரித்துறை செயலாளர் தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, ஆண்டுதோறும் ஜுன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினம் என்று அறிவிப்பதென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை, ஐ.நா.பொதுச்சபை 2014-ல் மேற்கொண்டது. நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக யோகா திகழும் நிலையில், உலகநாடுகள் அனைத்தும் யோகாவை அங்கீகரித்தது இந்தியாவிற்குக் கிடைத்த பெருமிதம் ஆகும். ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினம், காலையில் மாபெரும் யோகா பயிற்சியுடன் தொடங்கும், இந்த செயல்விளக்கத்திற்கு பிரதமரே தலைமையேற்பதோடு, அதன் தொடர்ச்சியாக, யோகா-வுடன் தொடர்புடைய பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச யோகா தினம், 2022-க்கு இன்னும் 67 நாட்களே உள்ள நிலையில், மத்திய நிலக்கரி அமைச்சகம், புதுதில்லி சாஸ்திரி பவனில், யோகோத்ஸவ் கவுண்ட்டவுன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சிகளை, நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர்.அனில் குமார் ஜெயின் தொடங்கிவைத்தார். இந்த கவுண்டவுன் கொண்டாட்டத்தில், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் கலந்து கொண்டனர். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் நிபுனர்களான திரு.சத்யேந்திர குமார் சிங், யோகா சிகிச்சையாளர் திருமதி.நீத்து சர்மா மற்றும் திருமதி .ஹர்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில், சாஸ்திரி பவன் வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அலுவலகங்களுக்கான யோகா-இடைவேளை நடைமுறை குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. காணொலி வாயிலாக இணைக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், யோகா நிபுனர்களுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதுடன், யோகா மிகவும் பயனளிக்கக் கூடியது என்பதோடு, இந்தப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வதன் அவசியத்தையும் அனைவரும் உணர்ந்தனர்.

திவாஹர்

Leave a Reply