ராய்ப்பூர், சத்தீஸ்கரில் ரூ.9,240 கோடி மதிப்பிலான 33 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த சாலைத் திட்டங்கள் சத்தீஸ்கரை ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றுடன் இணைக்கும் என்றார்.
இந்த சாலைத் திட்டங்கள் அமைக்கப்படுவதால் எரிபொருள், பயண நேரம், தூரம், ஒட்டு மொத்த போக்குவரத்துச் செலவு ஆகியவை குறையும் என்று அவர் தெரிவித்தார். இந்த சாலைகளால் வணிக மையங்கள், வர்த்தக வாகன மையங்கள், சுரங்கங்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றுக்கு எளிதாக போக்குவரத்து தொடர்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்