வாஷிங்டனில் எஃப்ஏடிஎஃப் அமைச்சர்கள் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

வாஷிங்டனில் 21, ஏப்ரல், 2022 அன்று நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் 2022 வசந்த கால கூட்டத்திற்கு இடையே இக்கூட்டம் நடத்தப்பட்டது.

2022-24-ம் ஆண்டுகளுக்கான எஃப்ஏடிஎஃப் நீடித்த முன்னுரிமை திட்டங்களை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக அமைச்சர்கள் நீடித்த வழிகாட்டுதலை வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. எஃப்ஏடிஎஃப் சர்வதேச கட்டமைப்பு, பரஸ்பர மதிப்பீடுகளுக்கான எஃப்ஏடிஎஃப் நடைமுறைகள், சர்வதேச பயனளிப்பு உரிமை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், குற்றவியல் சொத்துக்களை மேலும் திறம்பட்ட முறையில் கைப்பற்றுவதற்கான திறமைகளை அதிகரித்தல், டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்தல், எஃப்ஏடிஎஃப் நீடித்த முன்னுரிமை பணிகளுக்கு நிலையாக நிதி கிடைப்பதை உறுதி செய்தல் போன்றவை தொடர்பான அமைச்சர்களின் உறுதிமொழியை வலியுறுத்தும் விதமாகவும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை தடுப்பதற்கான இந்தியாவின் உறுதிமொழியை உறுதிப்படுத்தியதுடன், பயனளிப்பு உரிமை, வெளிப்படைத்தன்மை தொடர்பான எஃப்ஏடிஎஃப் பணிகளை ஏற்றுக் கொண்டு அதனைப் பாராட்டினார். சொத்து மீட்பு மற்றும் உலகளாவிய நிதி நடைமுறைகளை பாதுகாப்பதில் எஃப்ஏடிஎஃப் சர்வதேச கட்டமைப்பின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

நீடித்த முன்னுரிமை பணிகளுக்கான ஆதரவை நீட்டிப்பதாக தெரிவித்த திருமதி சீதாராமன், சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதிகளுக்கான நிதியுதவி கிடைப்பதை தடுப்பதற்கான சர்வதேச கூட்டணியாக செயல்படுவதில் எஃப்ஏடிஎஃப்-ன் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன் தேவையான உதவி, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு தடை விதிப்பதற்கான நிதியுதவிகளை வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply