விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்த ‘யோக் பிரபா’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.

புதுதில்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் “யோக் பிரபா” என்ற மெகா யோகா நிகழ்ச்சிக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியா மற்றும் இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி.கே. சிங் ஆகியோர் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்தனர்.

விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இவர்கள், பல்வேறு யோகாசனங்கள் மற்றும் பிராணயாமா நுட்பங்களைச் செய்வதற்கும், அவற்றின் பலன்களை அறிந்து கொள்வதற்கும் மொரார்ஜி தேசாய் யோகா நிறுவனத்தின் யோகா பயிற்றுனர்கள் வழிகாட்டியாக இருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சியால், 2014-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தது. நமது நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக யோகா இருப்பதால், யோகாவை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்வது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் போது 21 ஜூன் 2022 அன்று சர்வதேச யோகா தினத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், யோகாவின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்களிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த யோக் பிரபா உதவியதுடன், யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply