இளைஞர்கள் சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு சேவை செய்ய சிறிது நேரம் ஒதுக்கவும் முன்வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள்!

இளைஞர்கள் சேவை மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும், சமூகத்தில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த  பிரிவினருக்கு உதவிட சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் தேவிரெட்டி சாரதா தொண்டு அறக்கட்டளையைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், ‘சேவை’ என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி   என்றும், நாட்டின் நாகரீக மதிப்பு ‘பகிர்வு மற்றும் கவனிப்பு’ என்றும் வலியுறுத்தினார். மற்றவர்களுக்கு உதவுவதில் அளவற்ற திருப்தி கிடைக்கும் என்று கூறினார். குறிப்பாக இளைஞர்கள் ஏழைகளுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்றும், அரசு வழங்கும் சேவைகள் மற்றும் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறன் மேம்பாடு, அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துமாறு தொண்டு நிறுவனங்களை திரு நாயுடு வலியுறுத்தினார். நாட்டின் கிராமப்புறங்களில் சேவை சார்ந்த திட்டங்களை ஆர்வத்துடன் மேற்கொள்ள, சேவை செய்பவர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளி, சுகாதார சேவை மையம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய வசதிகளைப் பார்வையிட்ட நாயுடு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சேவை நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அறக்கட்டளையை அமைப்பதற்காக திரு  தேவி ரெட்டி, சுதாகர் ரெட்டி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

ஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply