இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் 2022 இல் 661.54 லட்சம் டன்னாக உள்ளது. கோல் இந்தியா லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி 534.7 லட்சம் டன், சிங்கரேனி கலோரிஸ் கம்பெனி லிமிடெட் நிலக்கரி உற்பத்தி 53. 23 லட்சம் டன், மற்றும் இதர முன்னணி நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்து கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட நிலக்கரியின் அளவு 73.61 லட்சம் டன்னாக உள்ளது.
நிலக்கரி அமைச்சகத்தின் தற்காலிக புள்ளி விவரப்படி, நிலக்கரி வெளியேற்றம் இந்த மாதத்தில் 708.68 லட்சம் டன்னாக உள்ளது, கடந்த ஏப்ரல் மாதத்தில் மின் துறைக்கு 617.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மின் துறைக்கு, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து மட்டும் 497.39 லட்சம் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 534.7 லட்சம் டன் (6.2 % வளர்ச்சி) உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முந்தைய சாதனையாக கடந்து 2019 ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி செய்த 450.29 லட்சம் டன் உள்ளது.
2020-21ல் 7160 லட்சம் டன்னாக இருந்த மொத்த நிலக்கரி உற்பத்தி, 8.55 சதவீத வளர்ச்சி அடைந்து 2021-22 நிதியாண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 7770.23 லட்சம் டன்னாக உள்ளது. இதேபோல், கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தி 2020-21ல் 5960.24 லட்சம் டன்னிலிருந்து 2021-22 நிதியாண்டில் 6220.64 லட்சம் டன்னாக 4.43 சதவீதம் உயர்ந்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி ஏற்றுமதி 8180.04 லட்சம் டன்களை தொட்டது. இது முந்தைய ஆண்டு 6900.71 லட்சம் டன்னாக இருந்தது. இது 18.43 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் 6610.85 லட்சம் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்துள்ளது.
–எம்.பிரபாகரன்