மத்திய எஃகு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் இன்று மத்திய எஃகு அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் தலைமையில் நடந்தது.

மத்திய எஃகு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் இன்று மத்திய எஃகு அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் தலைமையில் சிம்லாவில் இன்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பேசுகையில், குறைவான அளவு கார்பனை மட்டுமே வெளியேற்றும் வகையில் பசுமையான எஃகு தயாரித்து, சுயசார்பு இந்தியா இலக்கினை எட்டும் வகையில் புதிய யுக்தியை காண எஃகு தொழில்துறையினர் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பசுமை எஃகினை உற்பத்தி செய்யும் வகையில், பல்வேறு யுக்திகள், தொழில்நுட்பங்கள், நிறை குறைகள், தொழில்நுட்ப தயார் நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மூலம் இரும்பு தயாரித்தல் மற்றும் COP26 மாநாட்டு தீர்மானத்தின்படி கார்பன் வெளியீட்டை குறைத்தல் ஆகியவை குறித்தும் விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பித்யுத் பரன் மஹாத்தோ, சந்திர பிரகாஷ் சவுத்ரி, எச். ஞானதிரவியம், சப்தகிரி சங்கர் உலகா, விஜய் பாஹெல் மற்றும் அகிலேஷ் பிரசாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply