ட்ஜிபௌடி சென்றது ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பல்!

கடற்கொள்ளை தடுப்புக்காக,  ஏதன் வளைகுடாவில் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கப்பற்படையின் ஐ என் எஸ் கொல்கத்தா கப்பல், மே 4 முதல் 7-ஆம் தேதி வரை ட்ஜிபௌடி சென்றது.  அப்போது, ட்ஜிபௌடியின் தேசிய கடற்படை கமாண்டர் கர்னல் அகமது தாஹேர் த்ஜாமா, ட்ஜிபௌடி கடலோர காவல்படையின் தலைமைத் தளபதி கர்னல் வைஸ் ஓமர் போகோரே ஆகியோரை ஐ என் எஸ் கொல்கத்தா கப்பலின் கமாண்டிங் அதிகாரி கேப்டன் பிரஷாந்த் ஹண்டு சந்தித்துப் பேசினார். ட்ஜிபௌடி கடலோர காவல்படை படை அதிகாரிகளுடன் இருவரும் இந்திய கப்பலை சென்று பார்த்தனர்.

ஐ என் எஸ் கொல்கத்தாவிற்கு ட்ஜிபௌடி கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் வெளிப்படுத்திய மரியாதை மற்றும் நட்புறவு, இந்திய கடற்படையுடன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வலுவான நட்பை பிரதிபலிக்கிறது.

திவாஹர்

Leave a Reply