ஏற்காடு தாலுக்காவில் செயல்பட்டு வரும் பல தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், குறிப்பாக ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள ‘அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி’ எனும் பள்ளியில் மாணவர் மதிய உணவு சாப்பிட இட வசதி இல்லாததால், பள்ளிக்கு வெளியே உள்ள சாலையில் அமர்ந்து சாப்பிடுவதாகவும், இவ்வாறு உள்ள பள்ளிகளில் தர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட தே.மு.தி.க மாணவரணி துணை செயலாளர் காமராஜ் தலைமையில் ஏற்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனிவாசனை இன்று (31.07.2014) காலை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட ஏற்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனிவாசன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
-நவீன் குமார்.