தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்!

2af27c4தூத்துக்குடி அனல் மின் நிலையதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 31.07.2014 வியாழக்கிழமை காலை முதல் 1-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் மின் தேவையில் 17 சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட காரணத்தால் அடிக்கடி பழுது ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதற்கிடையே ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு அலகிலும் தனித்தனியே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை முதல் 1-வது அலகில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொடர்ந்து 20 நாட்கள் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

-பொ.கணேசன் @ இசக்கி.