திருச்சி, உறையூர் சாலை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி என்றுமே அதிகம் தான். இந்த குறுகலான சாலையில் வித்தைக்காரன் போல் வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. சாலையின் மையத்தில் விபத்தை உருவாக்கும் விதமாக பெரிய பள்ளம் ஒன்று வாகன ஓட்டிகளை மிரட்டி வருகிறது. சாலையை செப்பணிட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆர்.பி.சங்கர ராமன்.