தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்!- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்!

சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சி போன்ற அமைப்புகள் 150 சதவிகித சொத்து வரி உயர்வுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர்.

அத்தீர்மானத்தை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்ட இயக்கம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் அக்கட்சியின் மாமன்ற உறுப்பினர்களான 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரியம்மாள், 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு மற்றும் 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி நிர்வாகமே பொதுமக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை நிறுத்தி வை! என கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்து, உடனடியாக இத்தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

-டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/04/03/70767/

https://www.ullatchithagaval.com/2022/04/03/70743/

Leave a Reply