சாத்தூர் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு தனியார் கல்லூரி பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவிகளுக்கு மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் ஆறுதல்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு  தனியார் கல்லூரி பேருந்து கடந்த 6 ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் 21 மாணவிகள் காயமடைந்தனர். அதில் மூவர் படுகாயமடைந்தனர். சாத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 21 மாணவிகளில் மூவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (13.05.2022) காலை பலத்த காயமடைந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவி சுவேதா, வசந்தப்ரியா, ஜெயஸ்ரீ ஆகியோரை மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்து தைரியப்படுத்தினார்.

இச்சந்திப்பின் போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரகுராமன், மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சுருதி ரமேஷ், கோதண்டராமன், சூலக்கரை லட்சுமணன், மாநில ஆபத்து உதவிகள் அணி செயலாளர் முனியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பி.ஜி.பாண்டியன், மாநில மாணவரணி துணை செயலாளர் கௌரி மகேஷ் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் புலிப்பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், விருதுநகர் ஒன்றிய செயலாளர் முரளிதரன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் மதன், ஆத்திபட்டி ஒன்றிய செயலாளர் ஆர்.வி.குமார், விருதுநகர் முன்னாள் ஒன்றிய செயலாளர் வி. பி.சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் அரவிந்த், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், வழக்கறிஞர் மதுரை மாரையா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயராஜ், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய எம்.எல்.எப். நிர்வாகி தவமணி, கிளை செயலாளர் பிரபாகரன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்

http://www.ullatchithagaval.com/2022/05/06/72285/

Leave a Reply