உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத் என்ற 15பி வகையைச் சேர்ந்த போர்க்கப்பலும், உதயகிரி என்ற 17ஏ வகை போர்க்கப்பலும் மே 17-ஆம் தேதி மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
நாட்டில் போர்க்கப்பல்களின் வடிவமைப்புப் பணியில் தலைசிறந்து விளங்கும் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் இந்த இரண்டு கப்பல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவிற்கு சான்றளிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட உள்நாட்டு நிறுவனங்களுக்கு 75% கருவிகள் மற்றும் அமைப்பு முறைகளுக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
–திவாஹர்