தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக சாலைகள், ரயில் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள் அனைத்தும் பெருத்த சேதமடைந்துள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடு மற்றும் வாழ்விடங்களை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்கள் மற்றும் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
உள்ளூர் அரசு நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் ராணுவத்தினர் ஆகியோர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com