உணவு (சமையல்) சமைப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல; அது ஒரு தவம். இது அனைவருக்கும் கை கூடும் என்று சொல்ல முடியாது. அனைவருக்கும் இது எளிதில் வந்து விடுவதும் இல்லை.
ஒரு சிலர் என்ன சமைத்தாலும் அதில் அலாதியான ருசி அமைந்துவிடும். அவரின் கை பக்குவத்திற்கு வேறு யாரும் ஈடு இணை இல்லை என்று மற்றவர்கள் மிகவும் பெருமையாக பாராட்டி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ என்ன செய்தாலும் அவர்களுக்கு சமையலில் ருசி என்பது வருவதில்லை. அவர்களும் விதவிதமான சமையல்கள் செய்து பார்ப்பார்கள்! ஆனால் எந்த பயனும் இருக்காது.
உணவு சமைக்கும் பொழுது எப்பொழுதுமே மனம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது முதல் விதி ஆகும். வேண்டாவெறுப்புடன் சமைக்கும் பொழுது அந்த சமையலில் ருசி என்பது கட்டாயம் வருவதில்லை.
உயிர் வாழ தண்ணீர் அவசியம். என்றாலும்; தண்ணீரை மட்டுமே பருகி நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்துவிட முடியாது. அதனால்தான் அன்னம் அனைத்து மதங்களிலும் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படுகிறது. அந்த வகையில் சைவமும், வைணவமும் அன்னத்தானத்திற்கு பெரும் தொண்டாற்றி வருகிறது. அதனால்தான் அன்னத்தை அன்னப்பூரணியாகவே பாவித்து வழிப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தருமபுர ஆதீனத்தில் நடைப்பெற்று வரும் குருபூசை விழாவில் இன்று (22/05/2022) அன்ன களஞ்சியம் பூசை பெரும் விமர்சையாக நடைப்பெற்றது.
இதில் ஆதீனகர்த்தாக்கள், அடியார்கள் உள்பட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வயிறார உணவு வழங்கப்பட்டது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.