குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், மே 25, 2022 அன்று கேரளா, மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
திருவனந்தபுரத்தில் கேரள சட்டப்பேரவை ஏற்பாடு செய்துள்ள சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் தேசிய மாநாட்டை, குடியரசுத்தலைவர் மே 26, 2022 அன்று தொடங்கிவைக்கிறார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் உள்ள லட்சுமிபாய் தகதுஷேத் ஹல்வாய் தத்தா மந்திர் அறக்கட்டளையின் 125ம் ஆண்டு விழாவில் மே 27, 2022 அன்று குடியரசுத்தலைவர் பங்கேற்க உள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆரோக்கிய பாரதி ஏற்பாடு செய்துள்ள ஒரே நாடு – ஒரே சுகாதார முறையின் அவசியம் என்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் மே 28, 2022 அன்று உரையாற்றவுள்ளார்.
உஜ்ஜய்-னில் மே 29 2022 அன்று நடைபெறவுள்ள 59-வது அகில பாரதிய ஆயுர்வேத சம்மேளன மாநாட்டை குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார். பின்னர் அவர் தில்லி திரும்புகிறார்.
–திவாஹர்