பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சில திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள் 30 காவல் ஆய்வாளர்கள், 80 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1450 காவலர்களை கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர மோப்பநாய் பிரிவு, வெடி குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் ஆகியோரை பயன்படுத்தி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா