சேலம் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான மேல்மூத்தோர் பிரிவில் கைப்பந்து போட்டிகள் ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியில் நடந்தது.
இதில் மாவட்ட அளவில் சிறந்த அணிகள் பங்கேற்றன. ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி தனது முதல் போட்டியில் சேலம் சந்தியூர், வேதவிகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் மோதி 24 16 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதி போட்டியில் ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியும், சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் மோதியது. இதில் மாண்ட்போர்ட் பள்ளி 21 14 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வெற்றி பெற்றுள்ளது. இதில் கோகுல கிருஷ்ணன் 6 கோல்களையும், ஆதார்ஷ் 5 கோல்களையும், மிஜேஸ் 4 கோல்களையும், நவீது 3 கோல்களையும், அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். இதனால் மாண்ட்போர்ட் அணி மண்டல அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் வசந்த குமார், மற்றும் பெருமாள் ஆகியோரை பள்ளி முதல்வர் கே.ஜே.வர்கீஸ் பாராட்டினார்.
-நவீன் குமார்.