தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகள் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பாசனக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், நேற்று மாலை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால், தொழில் முதலீடுகள் தேடி வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு இதுவே சாட்சி என்றும் அவர் கூறினார்.

கரூர், திருச்சி, பெரம்பலுர், அரியலுர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நான்காயிரத்து 418 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாசனப்பகுதிகளில் ஆயிரத்து 580 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply