தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா

DSC00601தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டியில் வெற்றிபெற்ற இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த சுஸ்மித் கண்ணன், இந்து நாடார் நர்சரிப் பள்ளி மாணவி பி.கே.இலக்கியா, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் மாநில அளவிலான யோகான போட்டியில் முதலிடம் பிடித்த ஸ்டாண்டடு மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பாவானி, ஜாஸ்டர் ஆகியோருக்கு இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் கோவில்பட்டி சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சு.சுரேஷ்குமார், தலைமை பயிற்சியாளர் கருப்பசாமி மற்றும் யோகா பயிற்ச்சியாளர் அசோக்குமார் ஆகியோர் பாராட்டினார்கள்.

DSC00620மேலும், யோகாசன போட்டியில் வெற்றிபெற்ற வேம்பார் இந்து நாடார் நர்சரிப் பள்ளி மாணவி பி.கே.இலக்கியாவுக்கு விளாத்திகுளம் டி.எஸ்.பி உதயக்குமார் தலைமையிலும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கோவில்பட்டி வழக்கறிஞர் முருகானந்தம், சந்தானம் மற்றும் தொழிலதிபர் சிவா ஆகியோர் பாராட்டினார்கள்.

-கோ.சரவணக்குமார்.