புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்சுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார். அப்போது இருதரப்பு விவகாரம் பிராந்தியம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கொவிட் தொற்று சவால்களுக்கிடையே இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். எதிர்கால தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார்.
–திவாஹர்