பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்கான தண்ணீரை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் முதன்மையாக விளங்குவது பாபநாசம் அணையாகும். 143 அடி உயரமும் 5,500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவைக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கார் சாகுபடிக்கு ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் கார் சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பாபநாசம் அணையில் இருந்து இன்று காலை தண்ணீரை திறந்து வைத்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply