ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை, இந்தியா தொடர்வது குறித்து குறைகூறுவது கண்டிக்கத்தக்கது!- மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை, இந்தியா தொடர்வது குறித்து குறைகூறுவது கண்டிக்கத்தக்கது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அரசுமுறைப் பயணமாக ஸ்லோவேக்கியா சென்றுள்ள அவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் யுக்ரைன் பிரச்சினை வளரும் நாடுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார். 

இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு இறக்குமதி செய்வது தொடர்வதை அவர் சுட்டிக்காட்டினார்.இதில் இந்தியாவை மட்டும் குறைகூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று அவர் குறை கூறினார்.கோவிட் பரவலை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.இந்த சவாலான சூழ்நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரதமர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply