அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகாழாய்வில் பழங்கால சுற்று சுவர்கள் கண்டெடுப்பு!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளில் தற்போது தோண்டத் தோண்ட கட்டிடச் சுவர்கள் தென்படுகின்றன.

தமிழக அரசு முதல்கட்டமாக 2020-21 ஆண்டில் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்று 7 மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கடந்த பிப்ரவரி மாதத்தில்ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடாக மண்டி கிடக்கும் புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

கே.பி.சுகுமார்

Leave a Reply