தனது தலைமையிலான ஆட்சிக்கும், தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இதுவரை மூன்று அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
ஆனாலும், சர்வதேச மூத்த தரகர் சுப்பிரமணியன் சுவாமி இதுவரை திருந்தியதாக தெரியவில்லை.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அரசு வழக்கறிஞர் மூலம் அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது தொடர்பாக மிகவும் கேவலமாகவும், ஏளனமாகவும் தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் 16.09.2014 அன்று சர்வதேச மூத்த தரகர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீது புதிய சொத்துக் குவிப்பு வழக்கை தாம் தொடரப்போவதாக சர்வதேச மூத்த தரகர் சுப்பிரமணியன் சுவாமி தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் 17.09.2014 அன்று மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் தலைச்சிறந்த முதல்வராகவும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மத்தியில் மதிப்புமிக்க தலைவராகவும், இந்திய அரசியலில் 3-வது இடத்தில் இருக்கும் மிகப் பெரிய அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் புகழ் பெற்று திகழும் ஜெ.ஜெயலலிதாவை பற்றி, செத்துப் போனால் தூக்கியெறிவதற்கு நான்கு பேர் கூட இல்லாத நாதியற்ற சுப்பிரமணியன் சுவாமி அவதூறான கருத்துக்களை அவமானபடுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
இதை பாரத பிரதமர் நரேந்திர மோதியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையும் வேடிக்கை பார்த்து கொண்டு, மன்மோகன் சிங்கை போலவே மௌனமாக இருக்கிறது.
இன்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியும், எழுதியும் வரும் சுப்பிரமணியன் சுவாமி. எதிர் காலத்தில் பிரதமர் நரேந்திர மோதியை பற்றி பேசமாட்டார் என்பது என்ன நிச்சயம்?!
இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைப்பெற்ற போதும் இதே சுப்பிரமணியன் சுவாமி தான் இலங்கையில் நடைப்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றார். இலங்கை இராணுவக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பில் உரையாற்றினார்.
தற்போது பாரதிய ஜனதா ஆட்சியிலும் கிட்டத்தட்ட இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரதமரைப் போன்றே இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை சுப்பிரமணியன் சுவாமி நேரில் சென்று அளித்து வருகிறார்.
அப்படியானால் இந்த சுப்பிரமணியன் சுவாமி யார்? தேர்தல் மூலம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு தூதுவரா? (அல்லது) இந்திய அரசால் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளரா? (அல்லது) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புரோக்கரா? இவருக்கு இந்திய அரசாங்கம் என்ன அதிகாரம் அளித்துள்ளது?
அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியே அமைதியாக இருக்கும் போது, ஒட்டு மொத்த இந்தியாவும் தன் கையிலதான் இருக்கிறது என்ற தோற்றத்தை இந்த சுப்பிரமணியன் சுவாமி உலக தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். இது இந்திய ஆட்சியாளர்களையும், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அவமதிக்கும் செயல்.
இப்படி இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமியை தேச துரோகத் தடை சட்டத்தின் கீழ் இந்திய அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மக்கள் வரி பணத்தில் இவருக்கு வழங்கப்பட்டு வரும் அதிஉயர் பாதுகாப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவர் உலக நாடுகள் அனைத்திற்கும் உல்லாசமாக சென்று வருவதற்கு இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இவருடைய வருமானம் என்ன? உலக நாடுகளில் இவருக்கு இருக்கும் இரகசிய தொடர்புகள் என்ன, என்ன? என்ற விவரங்களை தேச நலன் கருதி உடனடியாக புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in