துபாயில் இருந்து சென்னை வந்த நபரிடமிருந்து ரூ. 30.13 லட்சம் மதிப்பில் 517 கிராம் தங்கம் மற்றும் கணக்கில் காட்டப்படாத மின்னணுப் பொருட்கள் பறிமுதல்!

உளவுப்பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் எமிரேட்ஸ் விமானம் ஈ கே- 542 மூலம் அதிகாலை 2:40 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த சேப்பாக்கத்தில் வசிக்கும் அமீரின் மகன், முகமது காசிம் என்பவர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரையும் அவரது உடைமைகளையும் சோதனையிட்டதில், அலங்கரிக்கப்பட்டிருந்த செல்பேசிகளின் உள்ளே 5 தங்க வெட்டுத் துண்டுகளும், தங்கத் தாளும் திறமையாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த நபரிடம் பிளேஸ்டேஷன் 4 மற்றும் இயற்கை நிலையிலான தங்க சங்கிலி இருந்ததும் தெரியவந்தது.

ரூ. 24.13 லட்சம் மதிப்பில் 517 கிராம் தங்கமும், கணக்கில் காட்டப்படாத ரூ. 6.00 லட்சம் மதிப்பிலான மின்னணுப் பொருட்களும் சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply