சுதந்திரத்தின் 75-வது அமிர்த பெருவிழாவை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன்ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருமான வரித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், ‘எனது இந்தியா கடந்த 75 ஆண்டு & அடுத்த 25 ஆண்டுகளில்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளை வேலூர் வருமானவரித் துறை அதிகாரிகள் பூரஜ் பிரசாந்த் மீனா மற்றும் பட்டாபிராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்தப் போட்டிகளில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 17-ஆம் தேதி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply