2021-22-ம் ஆண்டில், வறட்சியால் பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக நிதியுதவி அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இரண்டு மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1,043.32 கோடி
ராஜஸ்தான் – ரூ.1,003.95 கோடி
நாகலாந்து – ரூ.39.28 கோடி
இந்த கூடுதல் நிதியுதவியானது, ஏற்கனவே மாநில அரசுகளிடம் உள்ள மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக உள்ளது.
2021-22-ம் நிதியாண்டில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 28 மாநிலங்களுக்கு ரூ.17,747.20 கோடியும், 11 மாநிலங்களுக்கு ரூ.7,342.30 கோடியும் வழங்கியுள்ளது.
–எம்.பிரபாகரன்