கஞ்சா விற்பனை செய்பவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும்! -திணடுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பான்மசாலா குட்கா,புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்., விற்பனை செய்பவர்கள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை. திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதியதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் கடந்த வாரம் பொறுப்பேற்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கஞ்சா விற்பனை செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்படும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலேயே உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும், மேலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும்.

மேலும் அவர்களின் உறவினர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படும். அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொலை சம்பவம் அதிகரித்து உள்ளது. மேலும், கொலைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் உரிய முறையில் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி காவல் துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்தாலே குற்றச் சம்பவங்கள் குறையும், தற்போது நடந்துள்ள கொலைகள் அனைத்தும் முன்விரோத கொலைகள் அல்ல, ஆகவே காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் கொலை சம்பவங்கள் குறையும் என்று கூறினார். மேலும் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் யார் யார் விற்பனை செய்கிறார்கள் என்று கண்காணிக்கப்படும், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கஞ்சா விற்பனை மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம், நடவடிக்கை எடுக்கவில்லை எனில் காவல்துறை கண்காணிப்பாளர் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

டி.எஸ்.ஆர்
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply